சிவிலியன்களுடன் பிரபாகரனும் சகாக்களும் தற்கொலைக்குத் திட்டமாம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிறியதொரு நிலப்பரப்பைக் கைப்பற்றும் முயற்சியில் தற்போது பல முனைகளிலும் முன்னேறிச் செல்லும் இராணுவத்தினா,; அந்தப் பிரதேசத்துக்குள் நுழைந்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஏனைய அவரது முக்கிய சகாக்களும் அங்குள்ள ஆயிரக்கணக்கான சிவிலியன்களுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தெரிய வருகிறது.
குறிப்பிட்ட சில நாடுகளும் சில அமைப்புகளும் இலங்கைத் தமிழ் மக்களைக் கைவிட்டதுடன் போராட்டத்தையும் நசுக்கிவிட்டதாக இவர்கள் ஓர் அறிக்கையை சர்வதேசத்துக்கு வெளியிட்டதன் பின்னரே தற்கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ கடந்த வாரம் வெளியான வாராந்த ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்திருந்தார். பாதுகாப்புப் படையினரின் உளவுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தாம் இதனைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்
இதேவேளை, பிரபாகரனும் அவரது சகாக்களும் அப்பாவி தமிழ் மக்களைத் தமது இறுதி ஆயுதமாகப் பாவித்து வருவதாகப் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் கடந்த வாரம் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, படையினரிடம் சரணடைந்ததாகக் கூறப்படும் தற்கொலைப் பிரிவைச் சேர்ந்த புலி உறுப்பினர்கள் இருவா கடந்த ஞாயிறன்று வெளியான சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு அளித்திருந்த பேடடியில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தற்போது வன்னியில் இருப்பதாகவும் அவரது மகனான சார்ள்ஸ் அன்டனி தலைமையிலான பிரிவே இராணுவத்தினருடன் மோதி வருவதாகவும் இவருடன் இணைந்து பானு,லட்சுமனண் ஆகிய இருவரும் சண்டையிட்டு வருதாகவும் தெரிவித்திருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply