அக்கராயன்குளம் மற்றும் நாச்சிக்குடா இராணுவம் கைப்பற்றியது

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முக்கிய இடமான நாச்சிக்குடாவைக் கைப்பற்றியிருப்பதாகவும்  புதன்கிழமை மாலை நாச்சிக்குடா இராணுவத்தினரினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்ததாகவும்  தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

நாச்சிக்குடாவை நோக்கி மூன்று முனைகளில் இராணுவத்தினர் முன்னேறியதாகவும் ஒரு குழுவினர் மன்னார்-பூநகரி வீதியூடாகவும், மற்றைய குழு பல்லவராயன்கட்டு பகுதியிலிருந்து தென் பகுதியாக ஏ௩2 வீதியூடாகவும், மற்றைய குழு நாச்சிக்குடாவின் தென்பகுதி ஊடாகவும் முன்னேறியதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இராணுவத்தின் 57வது படைப்பிரிவு புதன்கிழமை பிற்பகல் கிளிநொச்சி தெற்கிலுள்ள அக்கராயன் குளத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாகவும் செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply