மாலத்தீவு முன்னாள் அதிபர் விடுதலை: விசாரணை ஒத்திவைப்பு

மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் மீதான வழக்கின் விசாரணை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நஷீத் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, அதிபர் தேர்தல் முடியும் வரை வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்கப்படும் படி கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கைக்கு அரசு தரப்பும் ஒப்புக்கொண்டது.இதையடுத்து வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நஷீத் அதிபராக இருந்த போது தலைமை நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து அவர் மாலேயில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். 11 நாட்களுக்கு பின் கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி இந்திய தூதரக்த்தில் இருந்து வெளிவந்த பின்னர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply