துமிந்த சில்வா பிணை மனு திங்களன்று மேல் நீதிமன்றில் பரிசீலனை

தற்போது விளக்கமறியலில், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் துமிந்த சில்வாவை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு எதிர்வரும் 11 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. துமிந்த சில்வாவின் தற்போதைய சுகாதார நிலைமையின் பேரில் அவரைப் பிணையில் விடுவிக்குமாறு செய்யப்பட்ட கோரிக்கை மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.பிணை மனுவை துமிந்த சில்வாவின் தந்தையாரான அருமாதுர வின்சன்ட் பிரேமலால் டீ சில்வா தாக்கல் செய்துள்ளார்.

சி. ஐ. டி.யினர் பணிகளைப் பூர்த்தி செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு பட்டு பிரதிவாதி தரையில் விழுந்து கிடந்ததால் அவர் குற்றம் அற்றவர் என காரணங்கள் தெரிவிக்கப்பட்டன.

பிரதிவாதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் நீண்ட காலத்துக்கு சிறைச்சாலையில் தடுத்து வைப்பதன் மூலம் இதுவரை பெற்ற மருத்துவப் பெறுபேறுகள் வாயிலாகப் பெற்ற முன்னேற்றம் குறைந்து அவரின் உயிருக்கும் ஆபத்து நேரிடலாமென பிணை மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுதாரரின் சார்பில் சட்டத்தரணி கல்ப பெரேராவின் வழிநடத்தலில் சட்டத்தரணி அநுஜ பிரேமரத்தின ஆஜரானார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply