அரசியல் தலையீடுகள் ஒட்டுமொத்த கல்வித்துறையையும் சீரழித்து வருகின்றது: சஜித்

அரசியல் தலையீடுகள் ஒட்டுமொத்த கல்வித்துறையையும் சீரழித்துக்கொண்டிருப்பதாகவும் நாட்டில் 73 சதவீதமான மாணவர்களின் மதிய உணவினை இல்லாதொழித்திருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்தார்.நாட்டில் இலவசக் கல்வி நடைமுறையில் இருக்கின்ற தற்காலத்தில் மாணவர்களிடமிருந்து பணம் அறவிடப்படுவது எதற்காக என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அம்பாந்தோட்டை ஜனாதிபதியினது மாவட்டமாகும். அங்கு இயங்கும் ஒரு பாடசாலையில் மாணவர்களிடமிருந்து 4000 ரூபா பாடசாலை நிர்வாகத்தினால் கோரப்பட்டுள்ளது. இந்த பணத்தை திரட்டிக்கொள்ள முடியாத நிலையில் தந்தையொருவர் தனது குடும்ப ஜீவனோபாயத்துக்கான படகினை விற்று பணத்தை செலுத்தியுள்ளார்.

எனவே இன்று ஒட்டுமொத்த கல்வித்துறையும் பாரிய சீரழிவினை எதிர்கொண்டிருக்கின்றது. அது மாத்திரமின்றி கல்வித்துறை முற்றுமுழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply