இலங்கைக்கு எதிராக தீர்மானம்: அமெரிக்க மந்திரியை சந்தித்து சுப்பிரமணியசாமி எதிர்ப்பு
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் மனித உரிமைகள் மீற பட்டுள்ளதாக ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் சில திருத்தங்களை செய்து இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது. இந்த தீர்மானம் வருகிற 21-ந் தேதி ஐ.நா. மன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அமெரிக்கா தீர்மானததை 30 நாடுகள் ஆதரிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்தியா தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.இந்த நிலையில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வாஷிங்டனில் தெற்கு மத்திய ஆசிய விவகாரங் களுக்கான அமெரிக்க மந்திரி ராபர்ட் பிளக்கை சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகளையும் சந்தித்து பேசினார்.
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்று அமெரிக்க மந்திரியிடம் சுப்பிரமணிய சாமி வலியுறுத்தினார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது விடுதலைப்புலிகள் ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகிவிடும். இதன் மூலம் விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்குவார்கள் என்று அவர் கூறினார்.
சுமார் 1 மணி நேரம் இதுகுறித்து அவர் அமெரிக்க மந்திரி மற்றும் அதிகாரிகளுடன் பேசினார்.இந்த சந்திப்பு குறித்து சுப்பிரமணிய சாமி கூறும்போது, இந்த சந்திப்பு திருப்தியாக இருந்தது. நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்து என்றார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாட்டு அரசு விசாரணை மேற்கொண்டால் போதும். சர்வேதச குழு அமைத்து விசாரிக்க தேவையில்லை என்றும் சுப்பிரமணியசாமி கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply