வளமான எதிர்காலத்துக்கான எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் : ஜனாதிபதி
இலங்கைவாழ் இந்துக்கள் அவர்களது சமய நம்பிக்கைக்கு ஏற்ப பல நூற் றாண்டுகளாக ஏனைய சமயங்களைச் சேர்ந்த மக்களுடன் ஐக்கியமாக வாழ்ந்து வந்துள்ளனர். இன்றைய சமாதான யுகத்தில் ஐக்கியம், புரிந்துணர்வு ஆகிய சிறந்த பாரம்பரியத்தை அவர்கள் தொடர்ந்து முன்னெடுப்பது மிகவும் ஊக்கமளிக்கும் அம்சமாகும். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அச் செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, சிவராத்திரி தினம் இந்துக்களின் சமய பஞ்சாங்கத்தில் முக்கியமானதொரு தினமாகும். இத்தினத்தை உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் விரதம் அனுஷ்டித்தல், கோயில்களில் இரவில் விழித்திருத்தல், சிவபெருமானுக்கு விசேட பூஜைகளைச் செய்தல், விளக்கேற்றல், சிவபெருமானைப் புகழ்ந்து தேவாரம் பாடுதல் போன்ற பல்வேறு கிரியைகள் மூலம் கொண்டாடுகின்றனர்.இப்பண்டிகை அறியாமையை அகற்றி ஞானத்தைத் தேடும் மானிட சமூகத்தின் உறுதியான முயற்சிகளைக் குறிப்பதாய் அமைகிறது. காமம், கோபம், பேராசை, பொறாமை, குரோதம் போன்ற தீய குணங்களை வெற்றிகொண்டு தமது வாழ்விலும் சமூகத்திலும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் தேடுவதற்கு இது வழி செய்கிறது.
இலங்கைவாழ் இந்துக்கள், அவர்களது சமய நம்பிக்கைகளுக்கேற்ப பல நூற்றாண்டுகளாக ஏனைய சமயங்களைச் சேர்ந்த மக்களுடன் ஐக்கியமாக வாழ்ந்து வந்துள்ளனர். இன்றைய சமாதான யுகத்தில் ஐக்கியம், புரிந்துணர்வு என்ற இந்த சிறந்த பாரம்பரியத்தை அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுப்பது மிகவும் ஊக்கமளிக்கும் அம்சமாகும்.
இந்த விசேட தினத்தில் ஏற்றப்படும் ஒவ்வொரு விளக்கும் இந்துக்களின் ஆன்மீக உணர்வை வளப்படுத்துவதுடன் அவர்கள் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் எமது எல்லா மக்கள் மத்தியிலும் ஐக்கியத்தையும் சிறந்த புரிந்துணர்வையும் கொண்டுவர வேண்டுமென்பதே எனது பிரார்த்தனையாகும்.
இந்த மகா சிவராத்திரி தினத்தில், வளமானதோர் எதிர்காலத்திற்கான எதிர்பார்ப்புகள் நிறைவேற இலங்கைவாழ் இந்துக்களுக்கு எனது மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply