இந்திய மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

இலங்கைத் தமிழர் பிரச்சினைதொடர்பாக அந்த நாட்டு அரசுக்கு நெருக்கடி கொடுக்கவியலாது என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்சல்மான் குர்ஷீதும் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்அபிஷேக்சிங்வியும்   கூறியிருப்பது தமிழ்மக்களிடையேமிகப்பெரியவருத்தத்தையும், வேதனையையும்ஏற்படுத்தியுள்ளது என திமுக தலைவர் மு கருணாநிதி கூறியிருக்கிறார்.ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில்அவர் மற்ற நாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் தலையிடமுடியாதென்றால், தென்னாப்பிரிக்காவின்இன் ஒதுக்கல் பிரச்சினையில்ஜவஹர்லால் நேருவும் வங்கதேசப் பிரச்சினையில் இந்திரா காந்தியும் தலையிட்டது எங்கனம் எனவினவியிருக்கிறார்.

இந்நிலையில் போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அதிபர் மஹிந்தா மீது பன்னாட்டு விசாரணை வேண்டுமென்ற கோரிக்கை குறித்து மத்திய அரசு தன் நிலைப்பட்டை மாற்றிக் கொண்டே ஆகவேண்டும், ஈழத்தமிழர் நலனில் அது அக்கறை காட்டவேண்டும் என்பதை வலியுறுத்தியேஎதிர்வரும் மார்ச் 12 அன்று பொதுவேலைநிறுதத்திற்கான அழைப்பு எனக் கருணாநிதி கூறியிருக்கிறார்.

இதனிடையே இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு வேண்டும், இலங்கைக்கெதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் மேற்கொண்டுள்ள உண்ணாநோன்பு மூன்றாவது நாளாக ஞாயிறன்றும் தொடர்ந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply