முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் நிறுத்தப்பட வேண்டும்: மேர்வின்

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தவறான பிரசாரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, இஸ்லாமியர்கள் அவர்களது மதத்தை பின்பற்றுவது அவர்களது உரிமையாகும். அதற்கு யாரும் தடையாக இருக்க கூடாது. அவ்வாறு யாரும் தடையாக இருந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,தற்போது மக்கள் யுத்தம் இல்லாமல் சமாதானமாக வாழ்கின்றனர். ஆனால் ஹலால் என்ற பிரச்சினையை உருவாக்கி இனவாதத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் காலத்தில் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேற முடியும். அதற்காக நான் அழைப்பு விடுக்கின்றேன். இதை யாரும் எதிர்க்க முடியாது. இவ்வாறு மீள்குடியேற்றம் செய்யும் போது வரும் சவால்களை சந்திக்க தயாராக உள்ளேன் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply