சவூதியில் குற்றவாளிகளின் தலையை துண்டிக்கும் தண்டனை முறையை ரத்து செய்ய ஆலோசனை
கொலையாளிகள் பற்றாக்குறையால் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றும் முறையில் மாற்றத்தை கொண்டுவர சவூதி அரேபியா அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக சவூதி நாட்டு நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஆயுதமேந்திய கொள்ளை, கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபடுபவர்களை பொது இடத்தில் நிற்க வைத்து தலையை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றி வந்த அரசாங்கம், தற்போது கொலையாளி பற்றாக்குறையால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லலாமா? அல்லது விஷ ஊசி போட்டு கொல்லலாமா? என ஆலோசித்து வருகிறது.
இதுதொடர்பான சவூதி அமைச்சரவையின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்நாட்டில் 2011ம் ஆண்டு 79 குற்றவாளிகளும், 2012ல் 76 பேரும், இந்த ஆண்டில் இதுவரை 15 குற்றவாளிகளும் தலை துண்டித்து தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply