முஷரப் 24-ந்தேதி பாகிஸ்தான் திரும்புகிறார்
பாகிஸ்தானின் ஆட்சியை கடந்த 1999ம் ஆண்டு ராணுவப் புரட்சியின் மூலம் கைப்பற்றியவர் . 2008 வரை 9 ஆண்டு காலம் பாகிஸ்தான் அதிபராக அவர் பதவி வகித்தார். 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, தேர்தல் பிரசார கூட்டத்தின் போது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த தேர்தலில் பெனாசிர் பூட்டோவின் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. பெனாசிர் பூட்டோ கொலை வழக்கை விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம், அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்காத முஷரப்பையும் இந்த கொலை வழக்கில் குற்றவாளியாக இணைத்த நீதிமன்றம், அவரை கைது செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, 2009ம் ஆண்டு பாகிஸ்தானை விட்டு தப்பிச் சென்ற முஷரப், இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், தேர்தலில் பங்கேற்கும் வகையில் தாய்நாட்டிற்கு திரும்ப முடிவு செய்திருப்பதாக சமீபத்தில் அவர் துபாயில் பேட்டியளித்தார்.
அவர் எப்போது பாகிஸ்தானுக்குள் நுழைந்தாலும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார் என பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் ஆஜராகும் அரசு தரப்பு வக்கீல் கருத்து கூறியிருந்தார்.
இதற்கிடையில், முஷரப்பின் ஊடக ஆலோசகர் குர்ரம் ஹாரிஸ் ‘வரும் 24ம் தேதி பொது பயணிகள் விமானம் மூலம் முஷரப் கராச்சி நகருக்கு செல்கிறார். வழக்குகளில் ஆஜராக அவர் தயாராக உள்ளார். எனவே, அவர் கைது செய்யப்பட மாட்டார். அவருக்கு தேவையான பாதுகாப்புகளை பாகிஸ்தான் அரசு வழங்கும் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.
எனவே முஷரப் பாகிஸ்தான் திரும்புவது உறுதியாகி உள்ளது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply