வவுனியாவில் நாமல் கிராமம் உருவாகிறது!

வவுனியாவில் நாமல் கிராமம் உருவாக்கப்பட்டு சிங்களக் குடியேற்றம் இடம்பெறுவதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். அசாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கையில் வசிக்கின்ற சிங்கள மக்கள் துறைமுகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி வவுனியாவில் குடியேற்றப்படுகின்றனர். அங்கு குடியேற்றம் இடம்பெற்ற இடத்திற்கு புதிதாக நாமல் கிராமம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு வடக்கில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுகின்ற அதேநேரம் தெற்கில் காணிகள் சீனாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இதேவேளை, இவ்வாறு குடியேற்றப்படும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 3 ஏக்கர் காணியும் துவிச் சக்கர வண்டியும் வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply