இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒரு தலைப்பட்ச அறிக்கை
ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் பிரேரணை பக்கசார்பான தகவல்களை மாத்திரம் கொண்டு தயாரிக்கப்பட்டது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது காணாமல்போன இராணுவத்தினர்இ புலிகளால் காணாமல் போன சாதாரண பொதுமக்கள் குறித்த விடயங்களைக் கவனத்தில் கொள்ளப்படவில்லையென இறந்த மற்றும் காணாமல்போனோரு டைய பெற்றோர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இழப்புக்கள் பற்றியே சர்வதேச சமூகமும்இ புலி ஆதரவு புலம்பெயர்ந்த சக்திகளும் பேசுகின்றன. யுத்தம் காரணமாக உயிரிழந்த காணா மல்போன படையினர் பற்றியோஇ புலிகளால் உயிரிழந்த மற்றும் காணாமல் போன பொதுமக்கள் பற்றியோ எவரும் பேசுவதில்லையென இறந்த மற்றும் காணாமல்போனோருடைய பெற்றோர்களின் ஒன்றியத்தின் ஏற்பட்டாளர் ஆனந்த பெரேரா கூறினார்.
தமக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்து இழப்புக்கள் அடங்கிய அறிக்கையொன்றைத் தயாரித்து ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பிவைத் திருப்பதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆனந்த பெரேரா இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பக்கசார்பான தகவல்களைக் கொண்டே ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கைக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் புலி ஆதரவு சக்திகள் எமக்கு ஏற்பட்ட இழப்புக்கள் பற்றி எதனையும் கதைப்பதில்லை.
இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மக்களின் மீது அக்கறைகொண்ட செயற்பாடுகளாகத் தெரியவில்லை. வேறு ஏதோ உள்நோக்கத்துடனேயே இவ்வாறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை தெளிவாகப் புலனாகிறது. ஒரு சாராரினை மாத்திரம் குற்றவாளிகளாக்கும் நோக்குடனேயே இலங்கைக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மற்றைய தரப்பினருடைய தகவல்கள் மற்றும் அவர்களின் கருத்துக்களையும் கேட்கவேண்டும்.
மூலம்ஃஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply