ஐ.நாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ இன்று உரை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகச் சென்றிருக்கும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு பேரவையில் உரையாற்றவுள்ளார்.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டமை தொடர்பில் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இன்றுவரை முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை அமைச்சர் நேற்று கையளித்தார்.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வடக்கின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம், சுயதொழில்வாய்ப்புக்கள், நல்லிணக்கம், அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், காணிக் கையளிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களை மையமாகக் கொண்டு அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply