கருணாநிதி தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்

இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த கலைஞர் கருணாநிதி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி புதுக்கோட்டையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள அரசு மன்னார் கல்லூரி மாணவர்களை சந்தித்து வாழ்த்திய அவர் செய்தியாளர்களிடம் கூறியது ;

இந்த அறவழிப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை மாணவர்களுக்கு உள்ளது. டெசோ அறிவித்த வேலை  நிறுத்தம் வெற்றி பெற்றதா என்பது குறித்து பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியும். அது படுதோல்வி  அடைந்ததை வழக்கம் போல உண்மையைத் திரித்துப் பேசும்  கருணாநிதி முழு வெற்றி எனக் கூறுகிறார்.

இலங்கையில் இனப் படுகொலை உச்சத்தில் இருந்த போது முதல்வராக இருந்த கருணாநிதி தமிழர்களைக் காக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. இதற்காக தமிழக மக்களிடம் அவர்  பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply