ஏப்ரல் தொடக்கம் ஹலால் உற்பத்தி புறக்கணிப்பு

எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி தொடக்கம் ஹலால் உற்பத்திகளை புறக்கணிக்கப் போவதாக நாடெங்கிலும் உள்ள சிற்றுண்டிசாலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹலால் சான்றிதழை தற்காலிகமாக அன்றி முழுமையாக தடை செய்யுமாறு பொது பல சேனா அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் பொது மக்கள் ஹலால் உற்பத்திகளை கொள்வனவு செய்ய மறுத்து வருவதாக சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்க தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அதிகளவான சிங்கள, தமிழ் நுகர்வோர் ஹலால் சான்றிதழை புறக்கணித்துள்ளதால் தமக்கு நட்டம் ஏற்படுவதாக அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply