யாழ்-கொழும்பு தனியார் பஸ் தடுத்து வைப்பு: மக்கள் அவதி
யாழ்ப்பாணம் – கொழும்பு போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்கள் வழி அனுமதிப்பத்திரமின்றி பேக்குவரத்தில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது. வழி அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணம் செய்த தனியார் பஸ் ஒன்று நேற்று (15) இரவு 9.30 மணியளவில் பளையில் வைத்து வீதிக் கண்காணிப்புப் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 பயணிகளுடன் சென்ற இந்தப் பஸ்சிற்கான வழி அனுமதிப்பத்திரமும், வரி அட்டையும் இருக்கவில்லை.
இதேவேளை குறித்த பஸ்ஸின் சாரதி மதுபோதையில் இருந்ததாகப் பயணிகள் தெரிவித்தனர்.
இந்த பஸ் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவருடையது எனவும் இவ்வாறாக பலர் வீதி போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி யாழ்-கொழும்பு பஸ் சேவையில் பஸ்களை அமர்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பஸ்ஸை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
பெருமளவு பெண் பயணிகளுடன் சென்ற இந்தப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் தமது பயணத்தைத் தொடர்வதில் பெரும் நெருக்கடிநிலையை எதிர்கொண்டதாக பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply