பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனம் பதிவு

இலங்கையின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தையில் தாமும் நேரடியாகக் கலந்துகொள்ளும் நோக்குடன் 15 தோட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனம் என்ற பெயரில் ஒரு தொழிற்சங்க அமைப்பை பதிவு செய்யவுள்ளன.  தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தையில் நேரடியாக தற்போதைக்கு மூன்று தொழிற்சங்கங்கள் மாத்திரமே கலந்துகொள்கின்றன. 

இந்த நிலையில் அதில் கலந்துகொள்ள வாய்ப்பில்லாமல் இருந்து வருகின்ற சுமார் 15 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த புதிய சம்மேளனத்தை ஏற்படுத்துகின்றன.

இதன் மூலம் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் மூன்று தொழிற்சங்கங்களை விட பெரிதாக அல்லது அவற்றுக்கு நிகரான ஒரு சம்மேளனமாக தமது அமைப்பு உருவெடுக்குமென்று அந்த அமைப்பின் செயலாளரான மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த ஆ. லோரண்ஸ் கூறுகிறார்.

சம்பளப் பிரச்சினைக்காக மாத்திரமன்றி தோட்டத்தொழிலாளரின் அனைத்து பிரச்சினைகளிலும் நீண்டக்கால அடிப்படையில் சிறப்பாக செயற்படும் அமைப்பாக தமது தொழிற்சங்கம் அமையும் என்றும் அவர் கூறுகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply