புத்தரை பச்சை குத்தி வந்தவர் நாடு கடத்தப்பட்டார்

புத்தர் உருவத்தை பச்சை குத்திய பிரித்தானிய பிரஜை ஒருவரை குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.  விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வந்திருந்த சுற்றலாப் பயணியே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.  உடல் முழுவதிலும் புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.   இலங்கையின் பெரும்பான்மை இனமான பௌத்தர்களை அவமதிப்பதாக இது அமைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்த குறித்த பிரஜை, நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படவில்லை.

உடலில் பச்சைக் குத்திக் கொள்வது தனது தனிப்பட்ட உரிமையும் விருப்பமும் என குறித்த பிரித்தானிய பிரஜை, இலங்கை அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

இலங்கையில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அந்த பிரித்தானிய பிரஜை தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக புத்தர் சிலைக்கு முத்தம் கொடுத்த பிரித்தானிய பிரஜைகள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply