சீனா இலங்கைக்கு ஆதரவளிக்கும்: புதிய ஜனாதிபதி உறுதி

இலங்கையின் இறைமையைப் பாதுகாக்க தமது ஆதரவை அளிக்க வேண்டும் என சீனாவிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். சீனாவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.  

இரண்டு நாடுகளும் நெருங்கிய நண்பர்கள் எனவும் இலங்கை மக்களின் மேம்பாட்டிற்காக சீனா வழங்கும் ஒத்துழைப்புக்களிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுதந்திரம், இறைமை, பூகோள ஒருமைப்பாடு, என்பனவற்றைப் பாதுகாப்பதற்கு சீனா உறுதியான ஆதரவை அளிக்கும் என்றும், சீனாவின் இயல்புக்கேற்ற வகையில் இலங்கைக்கு உதவிகளை வழங்க விரும்புவதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்போது, இலங்கையின் இறைமையைப் பாதுகாக்க தமது நாடு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும், உதவிகளை வழங்கும் என்றும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம், சீனாவின் புதிய ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

நீண்டகால நட்பு நாடுகளான இலங்கை – சீன உறவுகளை மேலும் மேப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சீன ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply