அரச பிரதிநிதி ஒருவரை கனடா இலங்கைக்கு அனுப்புகிறது

கனடா அரச பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி நாட்டின் நிலைமைகள் குறித்து நேரடி அவதானிப்பை செலுத்த தீர்மானித்துள்ளது.  அவர் இன்று அல்லது நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் ஆராயும் நோக்கில் கனடா தனது பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்புவதாக தெரிவிக்கப்படுகிறது.  

இவ்விஜயத்தின்போது கனேடிய பிரதிநிதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட பல பிரமுகர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மனித உரிமை நிலைமைகளில் மேம்பாடு ஏற்படாவிட்டால் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக கனேடிய பிரதமர் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply