அமெரிக்க பிரேரணையின் கடுந்தொனி குறைப்பு
இந்தியாவின் தலையீடு காரணமாக, அமெரிக்கா இலங்கை மீது கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் பரிசீலனைக்காக விடப்பட்ட வரைவின் கடுந்தொனி குறைக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்களுக்கு இலங்கையில் சகல வசதிகளையும் தடையின்றி வழங்கவேண்டும் எனும் வாசகம் நீக்கப்பட்டுள்ளது என்றும் அந்த வரைபில் கூறப்பட்டுள்ளது.
சகல மனித உரிமைகள், மக்களின் சுதந்திரம் என்பவற்றை உறுதி செய்வது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்ற வாசகத்திலிருந்து ‘இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும்’ என்பது அகற்றப்பட்டு அதற்கு பதிலாக ஒவ்வொரு அரசினதும் நோக்கமாகும் என்று சேர்க்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரஜைகள் யாவரும் மனித உரிமைகளை பூரணமாக அனுபவிக்கவும் நல்லிணக்கம் ஏற்படவும் அவசியமான அரசியல் அதிகார பகிர்வு உட்பட தேவையான அதன் பொறுப்புகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதை விசனத்துடன் நோக்குகின்றது’ என்பதற்கு பதிலாக இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது என்றும் திருத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply