அமெரிக்க பிரேரணையால் இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகள் பாதுகாக்க முடியாது

ஐநா மனித உரிமை கவுன்ஸில் அமர்வில் அமெரிக்கா சமர்பித்துள்ள பிரேரணை இலங்கை தமிழர்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒன்று அல்ல என இலங்கையின் ஜெனிவாவிற்கான முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தம்பரா குணநாயகம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தமது சொந்த நோக்கங்களை கருத்திற் கொண்டு பிரேரணை முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணை மூலம் இலங்கை தமிழர்களின் மனித உரிமை பாதுகாக்கப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய காலனித்துவ அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள இலங்கை மீது இவ்வாறான பிரேரணைகள் முன்வைக்கப்படுவதாக தம்பரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டு கொள்கை குறித்து நேற்று (20) மாலை கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றிய தம்பரா இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை ஒன்றிணைந்து தெளிவான வெளிவிவகார கொள்கை ஒன்றை கடைபிடிப்பதன் மூலம் வலுநிலை அடையாலாம் என அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply