சோனியா உருவபொம்மையை எரித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கரூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ,மாணவியர்கள், 21.03.2013 காலை இலங்கை அரசுக்கு எதிராகவும், தமிழ் ஈழத்தை அங்கீகரித்தல், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தரப்பில் தனியாக தீர்மானம் கொண்டு வருதல், தமிழக மீனவர்கள் மீதும், இலங்கை தமிழர்கள் மீதும் சிங்கள இராணுவம் நடத்தும் தாக்குதலை இந்திய அரசு தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தினர்.

மேலும், கரூர் பகுதியில் உள்ள 18 கல்லூரி மாணவர்கள் தொடர்ந்துஇ கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு கரூர் அரசு கலைக்கல்லூரி முன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  தலைவர் சோனியா காந்தியின் உருவ பொம்மையை கல்லூரி மாணவர்கள் எரித்தனர்.

மேலும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்டனர்.  கடந்த இரண்டு வார காலமாக மாணவ, மாணவியர்கள் போராட்டத்தில், குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை நேரிடையாக தாக்காமல், இந்திய அரசுக்கு மட்டுமே கோரிக்கை வைத்தபடி போராட்டம் நடத்தி வந்த மாணவ, மாணவியர் இப்போது, இந்த பிரச்சனைகளின் பின்னணியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தியுள்ளது மாணவர்கள் போராட்டாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதை காட்டியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply