பெளத்த பிக்குகள் மீதான தாக்குதலை கண்டித்து பேரணி

தமிழகத்தில் இடம்பெற்ற பெளத்த பிக்குகள் மீதான தாக்குதல் தமிழ் மக்கள் அனைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை அதனை தமிழ் மக்களாகிய நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என மத்திய மாகாண தமிழ் அமைப்புகள் அறிவித்துள்ளன. மத்திய மாகாண இந்து அமைப்புகளின் ஒன்றியம், மத்திய மாகாண தமிழ் வர்த்தகர் சங்கம், மத்திய மாகாண புத்திஜீவிகள் அமைப்பு ஆகியன இணைந்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளன.

தமிழக தாக்குதல் சம்பவம் தொடர்பாக கண்டியில் நேற்று (22) காலை எதிர்ப்பு ஊர்வலமொன்றும் இடம்பெற்றது. ஊர்வலத்தைத் தொடர்ந்து கண்டியிலுள்ள இலங்கைக்கான உதவி இந்திய தூதுவராலயத்துக்குச் சென்று மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

பெளத்த பிக்குகள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஏற்பாடாகிய எதிர்ப்பு ஊர்வலம் நேற்று கண்டி ஜோர்ஜ் ஈ டி. சில்வா பார்க் மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் ஆரம்பமாகி உதவி இந்தியத் தூதுவரா லயத்தை சென்றடைந்தது.

இதன் போது இந்திய உதவி உயர் ஸ்தானிகரிடம் மகஜர் ஒன்று கைய ளிக்கப்பட்டது.

இந்த மகஜரில் மத்திய மாகாண இந்து அமைப்புக்களின் ஒன்றியத் தின் தலைவர் நா. அருண்காந்த், ம.மா தமிழ் வர்த்தக சங்கச் செயலர் என். யோகநாதன், மத்திய மாகாண தமிழ் புத்திஜீவிகள் அமைப்பின் செயலாளர் பி. சிவகுமார் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply