இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுக்கு பொதுநலவாய நாடுகள் உதவ முடியும்
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களுக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு உதவிகளை வழங்க முடியும் என அதி வணக்கத்திற்குரிய பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய செனட்டர் ஹக் சேகுலை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மீளவும் இனங்களுக்கு இடையில் பதற்ற நிலைமை தோன்றக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு கால தாமதம் ஏற்படுவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.நூற்றுக் கணக்கான அரசியல் கைதிகள் எவ்வித வழக்குகளும் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு வழங்குவதில் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.சிறுபான்மை மக்கள் தொடர்ந்தும் உதாசீனம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமுடைய அரசாங்கம் ஏதேச்சாதிகார போக்கில் செயற்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்கும் என்ற நம்பிக்கையை குறித்த பிரதேச மக்கள் இழந்துள்ளதாக பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply