அரசாங்கம் ஐக்கிய செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும்!

எழுந்துள்ள அழுத்தங்களுக்கு எதிராக அரசாங்கம் ஐக்கிய செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் வசந்தபண்டார இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கம் இதனை செய்வது போல தோன்றவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த காலத்திலும் சர்வதேச நாடுகள் இலங்கையை வார்த்தைகளால் அச்சுறுத்தியது.

தற்போதும் அதனை மேற்கொள்கிறது.  இந்த நிலையில் சர்வதேச அழுத்தங்களையும், தலையீட்டினையும் தவிர்ப்பதற்கு, அனைத்து தரப்பையும் ஒன்றிணைத்து போராட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கம் கட்சி ரீதியாக மக்களை பிரித்து வைத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply