இலங்கையின் இனப்படுகொலைகளை மன்னிக்க முடியாது!
தேசிய லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று (23) சனிக்கிழமை காலை எழும்பூர் ஓட்டல் இம்பீரியல் வளாகத்தில் உள்ள பயாஸ் மகாலில் நடந்தது. கூட்டத்துக்கு கட்சித் தலைவர் அல்ஹாஜ் எம்.பஷீர் அகமது தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அப்துல்காதர் முன்னிலை வகித்தார். பொதுக் குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகளை மன்னிக்க முடியாது. சரணடைந்தவர்களை கூட இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. குழந்தைகளை கூட ஈவு இரக்கமற்ற வகையில் படுகொலை செய்ததை சர்வதேசமும், தமிழ் சமுதாயமும் கணடித்து இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை போர்க்குற்றவாளியாக அறிவித்துள்ளது.
ஆனாலும் இந்தியா இந்த விஷயத்தில் மென்மையான போக்குடன் நடந்துள்ளது. எல்.எல்.ஆர்.சி. தீர்மானத்தை நீர்த்து போக செய்ததை போல் ஐ.நா. மனித உரிமை மன்றத்திலும் இலங்கையை காப்பாற்றுவதில் கண்ணும் கருத்துமாக மத்திய அரசு செயல்பட்டு தமிழர்களின் உள்ளார்ந்த உணர்வுகளை ஊனப்படுத்தி வரலாற்று பிழை செய்துள்ளதை பொதுக் குழு வன்மையாக கண்டித்து கண்டனம் செய்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply