அடுத்த தேசத்துக்கு மகுடம் கண்காட்சி புத்தளம், சிலாபம் பகுதியில்
அடுத்த வருடத்திற்கான தேசத்துக்கு மகுடம் கண்காட்சி புத்தளம், சிலாபம் பகுதிகளின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அப்பிரதேசத்தில் இடம்பெறுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.அம்பாறையில் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில்…
நாட்டு மக்கள் அனைவரும் பேதங்களை களைந்து தேசத்தின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். 30 வருட யுத்தினால் நீங்கள் பட்ட கஷ்டம், வேதனையெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. எல்லோரும் அச்சமின்றி வாழ முடியும். கிழக்கில் அபிவிருத்தி வேலைகள் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றன. கிழக்கின் உதயம் உங்களின் உதயம். அது உங்களினதும் உங்களது பிள்ளைகளினதும் எதிர்காலமாகும்.
இந்த தேசத்திற்கு மகுடம் மூலம் கிழக்கு மாகாணம் நீங்கள் எதிர்பாராத வகையில் இன்னும் இன்னும் அபிவிருத்தி காணவுள்ளது. இதனையெல்லாம் நீங்கள் அனுபவிக்க வேண்டும். உங்களது பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும்.
பொய் பிரசாரங்களை ஒருநாளும் நம்ப வேண்டாம். நாட்டு மக்கள் அனைவரும் இனஇ மதஇ மாகாண பேதம் எதுவும் இல்லாமல் நாம் ஒன்றாக வாழ வேண்டும். சமாதானமாகவும் ஒரு தாயின் பிள்ளைகள் போலவும், சம உரிமைகளோடும் வாழ வேண்டும்.
எனவே நாட்டில் சமதான சகவாழ்வும் அபிவிருத்தியுமே முக்கியமானது. அதுதான் அவசியமும் எமது தேவையுமாகும் என்றார்.
கண்காட்சி இடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய வரவேற்றார். இதனையடுத்து மூவின மக்களையும் பிரதிபலிக்கும் வகையில் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இங்கு அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply