சட்டவிரோத மதுபான நிலையத்தில் யாழ் பொலிஸார் சோதனை
யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகரின் விசேட பணிப்புரைக்கு அமைவாக சுன்னாகம் பொலிசார் மேற் கொண்ட அதிரடியான சோதனை நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்கு ஒழுங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இயங்கிய மதுபான விற்பனை நிலையம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதுடன் பல லட்சம் ரூபா பெறுமதியான மதுபான வகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோத மதுபான நிலைய உரிமையாளரையும் மேலும் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ் குடாநாட்டில் சட்டவிரோதமான மதுபான விற்பனை நிலையங்கள் கடந்த கால போர் சூழலைத் தொடர்ந்து அதிகரித்துள்ளன. பல்வேறு குற்றச் செயல்களும் இடம்பெறும் நிலையில் இந்த நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டுள்ளார்கள்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply