4 ஆண்டுகளின் பின் நாடு திரும்பினார் முஷாரப்: பாகிஸ்தானில் பரபரப்பு

தலிபான்களின்களின் மிரட்டலையும் மீறி பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் அந்நாட்டுக்குத் திரும்பியுள்ளார். பாகிஸ்தானில் 1999 ஆம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஜனாதிபதியானார் பர்வேஸ் முஷாரப். அவர் ஆட்சிக் காலத்தில் பெனாசிர் புட்டோ படுகொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் முஷாரப் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அவர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானை விட்டு  வெளியேறிய அவர் சவூதி அரேபியா மற்றும் இங்கிலாந்தில் அரசியல் தஞ்சமடைந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் மேமாதம் 11ஆம் திகதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் தாமும் பங்கேற்பதால் நாடு திரும்புவேன் என்று முஷாரப் அறிவித்திருந்தார்.

அதற்கேற்ப தம் மீதான வழக்குகளில் முன் ஜாமீனும் பெற்றிருந்தார். அதே நேரத்தில் அவர் பாகிஸ்தான் திரும்பினால் கொலை செய்யப்படுவார் என தலிபான்கள் எச்சரித்திருந்தனர்.

டுபாயில் இருந்து விமானம் மூலம் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு முஷாரப்சென்றடைந்துள்ளார். இதனால் பாகிஸ்தானில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply