இலங்கை துணைத் தூதரகத்தை கேரளாவுக்கு மாற்றும் திட்டம் இல்லை!
சென்னையில் இயங்கும் இலங்கை துணைத் தூதரகத்தை கேரளாவுக்கு இடம்மாற்றவிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தியினை இலங்கை வெளிவிவகார அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அனைத்தும் வதந்திகளே யென்றும் அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரொட்டனி பெரேரா தெரிவித்தார்.
சென்னையில் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கை துணைத் தூதரகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள துணை தூதரகத்தை கேரளா தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாகவே ஊடகங்களில் செய்தி கள் வெளியாகியுள்ளன.
இச் செய்தி முற்றிலும் பொய்யெனக் கூறி மறுத்த ரொட்னி பெரேரா, அவ்வாறு எந்த தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை யெனவும் இலங்கைத் துணை தூதரகத்தை இடமாற்ற வேண்டிய அவசியம் இல்லை யென்றும் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply