அந்நியத் தலையீடுகள் முழு தெற்காசியாவையும் விழுங்கிவிடும் – காரியவசம்

அந்நியத் தலையீடுகள் இலங்கையை மட்டுமன்றி முழு தெற்காசியாவையும் விழுங்கிவிடு மென்று தெரிவித்துள்ள இந்தியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம், அந்நியத் தலையீடுகளுக்கு வழிகோல வேண்டாமென்றும் இந்தியாவைக் கேட்டுள்ளார். அந்நியத் தலையீடுகளுக்கு வழிகோலுவது சிறந்த நோக்கமல்ல என்றும் ‘ஹிசிரி தீரிரிறி’ பத்திரிகைக்கு அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிந்ததில் இருந்து இலங்கை அடைந்த சகல முன்னேற்றங்களையும் அமெரிக்க மனித உரிமைகள் கவுன்சிலின் பிரேரணை குறிப்பிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது வருடாந்தம் இலங்கையை இழிவுபடுத்தும் நிகழ்வாகும். இலங்கையையும் இந்து சமுத்திரத்தையும் சுற்றி அமெரிக்கா ஆடும் பெரும் விளையாட்டு இதுவென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளைத் தாமாகவே மதிப்பீடு செய்யுமாறு தமிழ் நாட்டுத் தலைவர்களை இலங்கை அழைத்துள்ளது.

ஆனால் தமிழ்நாட்டின் எந்த ஒரு அரசியற் கட்சியும் இதுவரை இதற்கு பதில் தரவில்லை என்றும் காரியவசம் தெரிவித்தார். எம்மிடம் இருந்து தொடர்ச்சி யாக அழைப்புகள் விடுக்கப்பட்டபோதும் இந்திய அரசியல் தலைவர்கள், குறிப்பாக தமிழகத் தலைவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை. அதனால்தான் அவர்கள் தவறான தகவல்களைப் பெற் றுள்ளனர் என தாம் கருதுவதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

மிழகத்தில் இலங்கைப் பிரஜைகள் மீதும் நிறுவனங்கள் மீதும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பிரஸ்தாபித்த உயர்ஸ்தானிகர், மிகச் சொற்பமானோரால் அவை புரியப் படுகின்றன. அது பயங்கரவாதமாக வர் ணிக்கப்படலாம் என்றும் காரியவசம் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply