புலிகளின் முகவர் தியாகராஜா மற்றும் நட்டாஷா என்ற சட்டத்தரணி சைப்பிரஸ் புலனாய்வுத்துறையால் கைது
மத்திய கிழக்கில் இருந்து எறிகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விடுதலைப்புலிகளுக்கு பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ரோஹண பிரியந்த என்ற தியாகராஜா என்பவரும், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் சைப்பிரஸ் பெண் சட்டத்தரணி நட்டாஷா ஆகியோர் சைப்பிரஸ் புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சைப்பிரஸ் காவற்துறையின் புலனாய்வு அதிகாரிகள் இந்த சந்தேக நபரின் கணனியைச் சோதனையிட்ட போது, ஆயுதங்களை விநியோகிக்கும் துருக்கி ஆயுத வியாபாரி மற்றும் அவரது உதவியாளர் விக்கி ஆகியோர் குறித்த தகவல்களை கண்டறிந்துள்ளனர். இதேவேளை இந்த ஆயுத வர்த்தகம் தொடர்பில் சைப்பிரஸ் காவற்துறையினர் மற்றுமொரு சந்தேக நபரையும் பல்கேரிய பிரஜை ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.
இந்த நிலையில் தியாகராஜா என்ற விடுதலைப்புலிகளின் முகவர், போலி கடவூச்சீட்டுகள் மூலம் 150 விடுதலைப்புலிகளை சைப்பிரஸிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் இதற்கு நட்டாஷா என்ற பெண் சட்டத்தரணி உதவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடம் இருந்து போலி வீசா அனுமதிகள், இலங்கை தூதரகத்தின் முத்திரைகள், கைப்பற்றபட்டுள்ளன. இந்த சந்தேக நபர்கள் அனைவரும் நேற்று நிகேஷியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றபட்ட ஈரானிய ஆயுதங்களை இந்த சந்தேக நபர்களே, புலிகளுக்கு விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply