இலங்கைக்கான விஜயத்தை நவநீதம்பிள்ளை நிராகரிப்பு
மனித உரிமை ஆணைக்குழுவின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை இலங்கைக்கு விஜயம் செய்வதை மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை நிராகரித்துள்ளார். உடனடியாக இலங்கைக்கு சென்று நிலைமைகளை கண்காணிக்குமாறு இந்தியா, நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதேவேளை அமெரிக்காவின் யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜெனிவாவுக்கான அமெரிக்கா தூதுவர் ஐலின் டொனஹோர் ஊடகங்களிடம் உரையாற்றினார்.
போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை தனது பொறுப்பில் இருந்து மீள இடமளிக்க போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்த விடயம் தொடர்பில் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply