தேசத்திற்கு மகுடம் கண்காட்சியால் கிழக்கில் தவணை பரீட்சைகள் ஒத்திவைப்பு
கிழக்கு மாகாண பாடசாலைகளின் முதலாம் தவணை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது. தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் தெரிவித்தார். இதனால் எதிர்வரும் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சைகள் அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாடசாலை ரீதியாக நடத்தப்படும் முதலாம் தவணை பரீட்சைகளை எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதிக்கு முன்னர் நடத்தி முடிக்கும்படி அறிவுறுத்தப்படுள்ளதாக எம்.ரீ.ஏ.நிசாம் தெரிவித்தார்.
பாடசாலை அதிபர்களின் வேண்டுகோளினை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட முடியும் மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply