கடாபியின் குடும்பத்தினருக்கு ஓமான் அடைக்கலம்

லிபியாவின் முன்னாள் அதிபர் முஹம்மர் கடாபியின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு ஓமான் அடைக்கலம் வழங்கியுள்ளது. ஓமான் அரசாங்கம் இதனை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. சர்வதேச காவல்துறையான இன்டர்போலினால் தேடப்பட்டுவருவோர் பட்டியலிலுள்ள இருவரும் இதில் அடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், அவர்களை நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தை அவசியமற்றது எனவும் லிபியா கூறியுள்ளது. கடாபியின் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு தலைநகர் த்ரிப்போலியைக் கைப்பற்றிய பின்னர், அவர்கள் அல்ஜீரியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்தனர்.

இந்த நிலையில், கடாபியின் மனைவியும் அவரது மூன்று பிள்ளைகளும் தமது நாட்டில் இருந்து முன்னறிவித்தல் இன்றி நீண்ட நாட்களுக்கு முன்னர் வெளியேறியுள்ளதாக அல்ஜீரியா கடந்த வாரம் அறிவித்திருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply