கூடங்குளம் அணுமின் நிலையம் ஏப்ரல் மாதம் செயல்படும் – மன்மோகன் சிங்
கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் செயல்படத் தொடங்கும் என இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் ரஷ்ய அதிபரிடம் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டினிடம் உறுதியளித்துள்ளார்.
ரஷ்ய நாட்டின் உதவியுடன் திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் ஆலை, ஏப்ரல் மாதம் மின் உற்பத்தியை தொடங்கும் எனவும், இந்திய அமைச்சரவை பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான குழு அங்குள்ள மூன்று மற்றும் நான்காம் ஆலைகளுக்கான அனுமதியை வழங்கியுள்ளது என்பதையும் விளாதிமிர் புட்டினிடம் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
அங்குள்ள அமைக்கப்படும் இரண்டாவது ஆலை, முதல் ஆலை மின் உற்பத்தியை தொடங்கிய ஆறு மாத காலத்துக்குள் செயற்படத் தொடங்கும் எனவும் இந்தியத் தரப்பு ரஷ்யத் தரப்பிடம் கூறியுள்ளது என்றும் முதல் இரண்டு ஆலைகளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் பெறும் பகுதி தமிழகத்துக்கு அளிக்கப்படும் எனவும் இந்திய உயர்மட்ட தகவல்கள் கூறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டங்கள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில்இ இந்தியப் பிரதமரின் இந்த உத்திரவாதம் வந்துள்ளது.
இந்த அணு மின் நிலையம் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்இ தமது வாழ்வாதாரங்களை பெருமளவுக்கு பாதிக்கும்இ பாதுகாப்பு கவலைகள் உட்பட பல காரணங்களை முன் வைத்து போராட்டக்காரர்கள் கடந்த பல மாதங்களாக போராடி வருகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையம் எப்போது செயல்படத் தொடங்கும் என்பது குறித்துஇ இந்தியப் பிரதமர் இப்போதுதான் முதல் முறையாக அதிகாரபூர்வமாக ஒரு உத்தரவாதத்தை வழங்கியுள்ளார் என்று பிரதமருடன் தென் ஆப்ரிக்கா சென்றிருக்கும் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply