இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியுமா? இல்லையா? ஜே.வி.பி

இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என ஜே.வி.பி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக கடுமையான எதிர்ப்பலை எழுந்துள்ள நிலையில், மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.  இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியுமா இல்லையா என்பதனை இந்திய மத்திய அரசாங்கம் தெளிவாக அறிவிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஜெயலலிதாவின் கடமையல்ல எனவும், அது மத்திய அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்வது பாதுகாப்பானதா இல்லையா என்பதனை இலங்கை அரசாங்கமும் தெளிவாக தெரிவிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் பங்கேற்கும் இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டமையை, இலங்கையர்களுக்கு இந்தியா செல்ல முடியாத நிலைமையாகவே கருதப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

30 ஆண்டுகளாக நீடித்த யுத்தத்தின் இணைக் காரணிகளுக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை எனவும், இதுவே தமிழகத்தில் பாரியளவில் எதிர்ப்பலை எழுவதற்கு காரணமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply