தேசிய நூதனசாலை காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளது

கொழும்பு தேசிய நூதனசாலை காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளது. நூதனசாலை திறக்கப்படும் தினத்தை பின்னர் அறிவிப்பதாகவும் இது குறித்து தேசிய மரபுகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நூதனசாலையை பார்வையிடச் சென்ற 30 மாணவர்கள் படி இடிந்து வீழ்ந்து காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருவதாக தேசிய மரபுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

படி மீள்நிர்மாணம் செய்யப்படும்வரை நூதனசாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply