தேசத்துக்கு மகுடம் கண்காட்சி நீடிப்பு
அம்பாறையில் மிகவும் பிரமாண் டமான முறையில் நடைபெற்று வரும் ஏழாவது தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி நாளை சனிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாளைய நிறைவு நாள் வைபவத்தில் பிரதமர் டி. எம். ஜயரட்ண, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஏற் பாட்டுக் குழு தலைவரும், தொலைத் தொடர்புகள் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நாளை நடைபெறவுள்ள நிறைவு நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கண்காட்சி நடைபெறும் ஹாடி உயர் தொழில்நுட்பவியல் நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரதான மேடையில் நிறைவு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
பிரதமர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரின் வருகையைத் தொடர்ந்து நிறைவு நாள் பிரதான வைபவம் ஆரம்பமாகவுள்ளது.
அம்பாறை – தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி கடந்த 23ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கண்காட்சி ஆரம்பிப்பதை குறிக்கும் வகையில் கண்காட்சி பிரதான மேடைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஜனாதிபதியினால் வைக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட வாள் தேசத்திற்கு மகுட கண்காட்சி நிறைவை அறிவிக்கும் வகையில் பிரதமரினால் அமைச்சர் சியம்பலாப்பிட்டிய விடம் மீண்டும் கையளிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் பிரதமர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் காட்சிக் கூடத்தை பார்வையிடவு ள்ளனர். இதேவேளை ஆறாவது நாளான நேற்றைய தினமும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள், மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.
நேற்றைய நாள் ஊடக தினம் என்பதால் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சு அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடக தின இசைக் களியாட்ட விழா நேற்று இரவு 9.00 மணியளவில் கோலாகலமாக ஆரம்பமானது. நேற்று இரவு தொடக்கம் நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த இசைக் களியாட்ட நிகழ்வு வானொலி, தொலைக்காட்சிகளில் நேரடி ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.
நேற்றைய தினமும் பெரும் எண்ணிக்கையிலான கிழக்கு மற்றும் ஏனைய மாகாண தமிழ், முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் வருகை தந்திருந்தனர். அத்துடன் தமிழ், முஸ்லிம் மக்கள் குடும்பம் குடும்பமாக பெருமளவில் வருகை தந்திருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply