இலங்கை – இந்திய இராஜதந்திர உறவில் முழு வீழ்ச்சி
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவு தற்போது முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். இந்த நிலைக்கு அரசாங்கமும் வெளிவிவகார அமைச்சும் பொறுப்பு கூற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இலங்கை கிரிக்கெட் வீரர்களும் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளதாக லக்ஷமன் கிரியெல்ல கூறினார்.
தற்போதுள்ள நிலையில் இலங்கை அரசும் வெளிவிவகார அமைச்சும் இந்தியாவுடன் இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை நடாத்தி விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக விளையாட்டு வீரர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply