பாகிஸ்தான் மீதான ஏவுகணை தாக்குதலை நிறுத்துங்கள் அமெரிக்காவிடம் கிலானி அரசு வலியுறுத்தல்

பாகிஸ்தான் பழங்குடிஇன மக்கள் வசிக்கும் பகுதிகளில் தஞ்சம் புகுந்து உள்ள தீவிரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்தபடி ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் அரசாங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பாகிஸ்தான் அரசாங்கம், அந்த நாட்டுக்கான அமெரிக்காவின் தூதர் ஆன் பீட்டர்சனை வெளிநாட்டு அமைச்சரக அலுவலகத்துக்கு அழைத்து தன் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்தது.

இந்த தாக்குதல் பாகிஸ்தானின் இறையாண்மையை மீறுவதாகும் என்றும், உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும் அது கூறியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply