இலங்கை உயர்ஸ்தானிகரை வெளியேற்றுமாறு ஜெயலலிதா கோரிக்கை
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை இந்தியாவில் இருந்து வெளியேற்றுமாறு தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, இந்திய மத்திய அரசாங்கத்தை கேட்டுள்ளார். இலங்கை சிங்களவர்களில் 71 வீதமானவர்கள் இந்தியாவின் ஒடிசா மற்றும் வங்காளத்தை சேர்ந்த வம்சாவளியினர் என உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே தமிழக முதல்வர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
பண்டைய கலிங்க தேசத்தில் இருந்தே சிங்கள மக்கள் இலங்கைக்கு சென்றதாக தூதுவர் கூறியிருந்தார்.
அதேவேளை இந்திய பொருட்கள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை நிறுத்துமாறும் ஜெயலலிதா விடுத்த கோரிக்கைக்கு இந்திய மத்திய அரசாங்கம் பதில் எதனையும் வழங்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply