நெல்சன் மண்டேலாவின் உடல் நிலையில் முன்னேற்றம்
தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் உடல் நிலை தேறி வருவதாக அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஜோசப் சூமாவின் காரியாலயம் அறிவித்துள்ளது. 94 வயதான மண்டேலா இன்று தனது முழு காலை உணவையும் உட்கொண்டதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுரையீரல் தொற்று காரணமாக மண்டேலா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் நான்கு தடவைகள் நெல்சன் மண்டேலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.
இனவெறிக்கு எதிராகப் போராடி உலக மக்களின் நன்மதிப்பை வென்ற தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவித்த நெல்சன் மண்டேலா, அதன் பின்னர் பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதியாக பதவியேற்றிருந்தார்.
2004 ஆம் ஆண்டு முதல் தென்னாபிரிக்காவின் முன்னான் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதை தவிர்த்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply