இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான புதுடில்லி பேச்சுவார்த்தைகள் தோல்வி இந்தியாவின் போக்கில் சந்தேகம்: ராமதாஸ்
இலங்கைப் பிரச்சினை தொடர்பில் புதுடில்லியில் தாம் நடத்திய பேச்சுவார்த்தைகள் திருப்தியளிக்கவில்லையென தமிழக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்ததாவது, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோருடன் இலங்கை விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் திருப்தியளிக்கவில்லை.
இது போன்றே இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடனான சந்திப்பிலும் எவ்வித பயனும் கிட்டவில்லை. யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா இலங்கையை நிர்ப்பந்திக்க முடியாதென பிரணாப் முகர்ஜி உறுதிபடத் தெரிவித்தார். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கருத்துத் தெரிவிக்கையில் தற்போது இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply