இலங்கை-இந்திய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருந்தால் இனப்பிரச்சினை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும் : முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

நாட்டில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ளும் நோக்குடன் 1987 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் இல்லாதொழித்து விட்டன என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அதிகாரப் பரவலாக்கலை முறையாக முன்னெடுத்துச் சென்றிருந்தால் இலங்கை இனப்பிரச்சினை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய பஞ்சாயத்து அமைச்சர் மணி சங்கர் ஐயரின் புத்தக வெளியீட்டு விழா புதுடில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டமூலம் தற்பொழுது பொருத்தமான ஒன்றாகும் என்று கூறிய அவர் அதனை நடைமுறைப்படுத்த தான் முயன்றபோதும் ஒரு சில அரசியல்கட்சிகள் அதனை நடைமுறைப்படுத்த அனுமதிக்கவில்லை என்றும் கூறினார். 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது சுதந்திர தமிழ் அரசொன்றை அமைக்க வழி வகுத்துவிடும் என்று சில அரசியற் கட்சிகள் தடுத்து விட்டதாகவும் கூறினார். எனினும் கட்சிகளின் பெயர்களை அவர் பிரஸ்தாபிக்கவில்லை. தொடர்ந்து பேசிய அவர், “13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதவாறு சதி இடம் பெறாதிருந்தால் பிரச்சினைகள் தீர்ந்திருக்கும். ஆனால் பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசும் குறித்த 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வராதிருப்பதையே உறுதி செய்து வருகின்றன”என்று சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச்டசட்ட மூலத்தை நடைமுறைப்படுத்த தன்னாலும் முடியாது போனது என்பதை ஏற்றுக் கொண்ட அவர் சில வேளைகளில் 75 வீதமான சிங்க மக்கள் புலிகளை தமிழர்கள் ஆதரிப்பதாகக் கூறுகின்றனர். தமிழ் மக்களுக்கு வேறு தெரிவு இல்லை. ஏனெனில் அரசாங்கம் அவர்களுக்கு வேறு தெரிவு எதனையும் வழங்கவில்லை. எனவே அவர்கள் புலிகளை ஆதரிக்க தள்ளப்படுகின்றனர். அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை.அதற்காக தனிநாடு தேவை என்றோ, அவர்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவென்றோ அர்த்தம் கொள்ளக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply