ஐ. நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் மீண்டும் நிராகரிப்பு
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நேற்றைய (பெப். 18) கூட்டத்தில் இலங்கை விவகாரம் பற்றிய விவாதத்தை எடுப்பதில் மீண்டும் தடை ஏற்பட்டுள்ளது. இலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான மெக்சிக்கோவின் தூதுவர் கிளவுட் ஹெல்லர் (Claude Heller) , இம்மாத முற்பகுதியில் கேள்வி எழுப்பியதுடன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார்.
இது பற்றி நேற்று மீண்டும் கருத்து வெளியிட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான மெக்சிக்கோவின் தூதுவர் கிளவுட் ஹெல்லர் (Claude Heller) சபையின் பொதுச் செயலர் பான் கி-மூன் தனது தூதுவரை கொழும்பிற்கு அனுப்பியிருப்பதால், விவாதம் பற்றி முன்னர் தான் விடுத்த வேண்டுகோள் தொடர்ந்தும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறினார்.
இலங்கை விவகாரம் குறித்து மெக்சிக்கோ நேற்று (பெப். 18) மீண்டும் பாதுகாப்பு சபையில் கேள்வி எழுப்பியபோது, தற்போது பாதுகாப்பு சபைக்குத் தலைமை வகிக்கும் யப்பானின் தூதுவர் யுகியோ ரகாசோ (Yukio Takaso), இலங்கை பற்றிய விவாதத்தினைத் தவிர்த்துக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சில வாரங்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிராக மெக்சிக்கோ கொண்டுவரவிருந்த தீர்மானத்தை பிரித்தானியாவும், ரஷ்யாவும் நிராகரித்திருந்தம்மை இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply