புலிகளின் இறுதி நகரமான புதுக்குடியிருப்புக்குள் இராணுவம் நுழைந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த புதுக்குடியிருப்பு நகரப் பகுதிக்குள் இராணுவத்தினர் சென்றுள்ளதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று (பெப். 20) தெரிவித்தது. சுமார் 25 சதுர கி. மீ பரப்பைக் கொண்ட இந்த நகரமே புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கடைசி நகரமாகும்.
இங்கு படையினர் நடத்திய தேடுதலின் போது புலிகளின் மூன்று சடலங்களையும் ரி-56 ரக ரைபிள்கள் 7, மூன்று தொலைத்தொடர்பு கருவிகள் ஆகியனவற்றினையும் கைப்பற்றினர். இதே வேளை, நீருக்கடியில் ஓடக்கூடிய புலிகளின் மூன்று ஸ்கூட்டர்களை படையினர் நேற்று (பெப். 19) வன்னியிலிருந்து மீட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
புதுக்குடியிருப்புக்கு வடக்கே தமது நிலைகளைப் பலப்படுத்திவரும் படையினர் அம்பலவன் பொக்கணை என்ற கிராமத்திலிருந்தே நீருக்கடியில் ஓடக் கூடிய மூன்று ஸ்கூட்டர்களுடன் பல பொருட்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply