மக்களை வெளியேற்ற இந்தியா உதவி: வரவேற்றது இலங்கை
வன்னியில் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்பதற்கு இந்தியாவின் உதவியை ஏற்றுக்கொள்வதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
“ஆபத்தான நிலையிலிருக்கும் பொதுமக்கள் குறித்தே இலங்கை அரசாங்கமும் கவனம் செலுத்தியுள்ளது. இதனை நாங்கள் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வோம்” என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சி.ஆர்.ஜெயசிங்க கூறியுள்ளார்.
“ஆபத்திலுள்ள மக்களை வெளியேற்றுவதற்கு ஆர்வமாகவிருக்கிறோம் என்ற தமது நிலைப்பாட்டை இந்தியா உத்தியோகபூர்வமாக வெளிக்காட்டியுள்ளது. நட்பு நாடான இந்தியாவின் இந்த ஆர்வத்தை நாங்கள் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டார்.
மக்களை வெளியேற்றுவது தொடர்பான திட்டம் விரைவில் தயாரிக்கப்படும். களநிலவரத்தைப் பொறுத்தே அந்தத் திட்டம் அமையும். பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றும் அரசாங்கத்தின் திட்டத்தை விடுதலைப் புலிகள் தடுக்க முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.
“பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்” என்றார் உயர்ஸ்தானிகர்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிடவேண்டுமெனவும், பொதுமக்களை வெளியேற்ற இந்தியா தயாரகவிருப்பதாகவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் கூறிய கருத்துக்களை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வரவேற்றுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply